தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக படம் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அஜித் 61 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நேற்று காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகும் இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அஜித் 62 படம் பற்றி கேட்க இந்த படத்திற்காக நான் மூன்று வருடங்களாக உழைத்து வருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் நிச்சயம் அஜித் 62 திரைப்படம் தனமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
