Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் பட டைட்டிலுக்கு வந்த சிக்கல்.படக்குழு எடுக்க போகும் முடிவு என்ன?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக lic என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த கீர்த்தி செட்டி நாயகியாக நடிக்க உள்ளார். படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் எல்ஐசி நிறுவனம் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் எல்ஐசி என்பது பதிவு செய்யப்பட்ட வணிக பிராண்ட் ஆகும். இதை உங்களது படத்தின் தலைப்பாக வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இப்படி பெயர் வைத்திருப்பது எங்களது நிறுவனத்தின் மீதான நன்மதிப்பை இது குறைத்து விடும். எனவே இந்த நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் உங்களது படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும், வேறு பெயரை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் படக்குழு அடுத்து என்ன செய்யப் போகிறது எப்படியான முடிவை எடுக்க போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh shivan movie title issue
Vignesh shivan movie title issue