இந்திய திரை உலகில் பிரபல நட்சத்திர தம்பதியினராக திகழ்ந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு இரண்டு முறை ஹனிமூன் சென்று விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து இணையத்தை தெறிக்க விட்டனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி விக்னேஷ் சிவனின் 37 வது பிறந்தநாள் அன்று நயன்தாரா அவரை துபாய் அழைத்து சென்று சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதாவது, உலகின் மிக உயரமான கட்டிடமாக போற்றப்படும் துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர், நயன்தாரா அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனது பிறந்தநாள் என் குடும்பத்தினரின் பரிசுத்தமான அன்பாலும், என் தங்கம், என் மனைவியின் சர்ப்ரைஸாலும் நிறைந்துள்ளது” என்று புகைப்படங்களுடன் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். அவரது இந்த மகிழ்ச்சியான பதிவு ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram