Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் குறித்து பேசி உருக்கமான பதிவு வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. காரணம் என்ன தெரியுமா?

vignesh shivan viral post about actor dhanush

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக தற்போது வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இந்த திரைப்படம் வெளியாகி 7 வருடங்களான நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோவை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது தொடர் தோல்வி படங்களை கொடுத்திருந்த விக்னேஷ் சிவனுக்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்தது தான் இந்த நானும் ரவுடிதான் திரைப்படம். இப்படத்திலிருந்து தான் விக்கி மற்றும் நயன்தாரா இடையே உள்ள காதலும் மலர்ந்திருந்தது. இப்படம் விக்னேஷ் சிவனுக்கு மட்டுமின்றி விஜய் சேதுபதிக்கும் ரசிகர்களின் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு ஏற்படுத்தியிருந்தது. இப்படி பலரது வாழ்க்கையும் திருப்பி போட்டு இருக்கும் இப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளை பூர்த்தி செய்து இருக்கிறது.

தனுஷ் தயாரிப்பில் வெளியான இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் ஒரு காட்சியை பதிவிட்டு அதன் கீழ் “7 ஆண்டுகள் இன்ப அனுபவம் இந்த படம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இதற்காக எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன் தனுஷ் சார்” என்று உருக்கமாக பதிவிட்டிருப்பது தற்பொழுது வைரலாகி வருகிறது.