தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால் படம் பற்றிய கதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் கூட்ட கூட்டமாக பார்த்து வருகின்றனர். தற்போது வரை வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அவர், வாசிப்பு அனுபவத்தின் உச்சமான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மணி சாரின் காட்சி வடிவில் திரை அனுபவத்தின் உச்சமாக மெருகேற்றியுள்ளது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என அத்தனை பரிணாமங்களிலும் உச்சம் தொட்ட இத்திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு ‘மணி’ மகுடம். என்ன பதிவிட்டுள்ளார்.
வாசிப்பு அனுபவத்தின் உச்சமான 'பொன்னியின் செல்வன்' நாவல் மணி சாரின் காட்சி வடிவில் திரை அனுபவத்தின் உச்சமாக மெருகேறியுள்ளது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என அத்தனை பரிணாமங்களிலும் உச்சம் தொட்ட இத்திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு 'மணி'மகுடம்.
— Vignesh Shivan (@VigneshShivN) October 5, 2022