தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். அதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் தயாரித்து வருகிறார்கள். ராக்கி படத்தை வாங்கி வெளியிடவும் இருக்கிறார்கள்.
தற்போது ‘கூழாங்கல்’ என்னும் படத்தின் உரிமையை விக்னேஷ் சிவன் – நயன்தாரா கைப்பற்றி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த ‘கூழாங்கல்’ எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது.
‘கூழாங்கல்’ பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.
உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்”.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Glued to the Press Conference of International Film Festival of Rotterdam… 😇😇😇 🤞
Hoping for the announcement of our film "Koozhangal"…in the competition category @IFFR #Nayanthara @PsVinothraj @thisisysr #koozhangal #pebbles pic.twitter.com/Fx36l6SWCk
— Vignesh Shivan (@VigneshShivN) December 22, 2020