தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் எக்கச்சக்கமான பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பூஜை நேற்று நடைபெற்றது பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் பங்கேற்றனர்.
ராஷ்மிகா மந்தனா விஜயோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்த போட்டோவில் விஜய்க்கு பதிலாக வடிவேலுவை வைத்து மீம்ஸ் உருவாக்கி ரசிகர்கள் உள்ளனர்.
இப்படியான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
View this post on Instagram