நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து மாநாடு படம் மூலமாக நல்ல கம்பக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் பெரிய ஹிட் ஆனதால் அடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் சிங்கிள் டிஜிட்டில் இருந்த அவரது சம்பளமும் டபுள் டிஜிட்டுக்கு மாறி இருக்கிறது என சமீபத்தில் தகவல் வெளியானது.
தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சிம்பு தற்போது கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றி ஒரு புது தகவல் வெளியாகியிருக்கிறது. சிம்பு மீண்டும் விஜய்யுடன் மோத இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வெந்து தணிந்தது காடு படமும் ஏப்ரல் மாதம் தான் ரிலீஸ் என அறிவித்து இருக்கின்றனர்.
இதனால் மூன்றாவது முறையாக விஜய் சிம்பு மோதல் நடக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே துப்பாக்கி – போடா போடி, மாஸ்டர் – ஈஸ்வரன் ஆகிய படங்கள் மோதிக்கொண்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சிம்பு விஜய்யுடன் மோதப்போகிறார்.