Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமலுடன் இணையும் விஜய், சூர்யா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Vijay and Suriya joins Kamal - Surprise waiting for the fans

நடிகர் கமல் ஹாசன் தற்போது நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தை கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுமட்டுமின்றி இதுவரை பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களின் படங்களையும் தயாரிக்கவுள்ளதாம் ராஜ் கமல் நிறுவனம்.

அதன் முதல்படியாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து ஒரு படமும், தளபதி விஜய்யை வைத்து ஒரு படமும் கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இருவரிடம் கால்ஷீட் கேட்டபோது, இருவரிடம் இருந்தும் ஏறக்குறைய ஓகே என்பது போன்ற பதில் தான் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்று..