Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் மடியில் அமர்ந்து உணவு உண்ணும் பிரபல தமிழ் நடிகர் – இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர்களின் ஆலமரமாக விளங்கி வரும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் திறமையால் மட்டுமே இன்று உச்சத்தை தொட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் இன்றைய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார். தளபதி விஜய் பற்றி கடுகளவு விஷயம் வெளியானாலும் அதனை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் சிறு வயதில் தன் அம்மாவுடன் அமர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் உணவு அருந்துகிறார். தளபதி விஜயின் மடியில் இன்னொரு சிறுவன் அமர்ந்து உணவு உண்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விக்ராந்த் தான். இவர் உறவு முறையில் தளபதி விஜய்யின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.