Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி – சம்பளம் தர மறுத்த படக்குழு

Vijay Antony new avatar

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. விஜய் ஆண்டனி கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் உள்ளன.

இதுதவிர மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கும் “கோடியில் ஒருவன்” படத்திலும் நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அரசியல் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால் படக்குழுவினர் இதற்கு சம்பளம் தர மறுத்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, ‘கோடியில் ஒருவன் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனிதான் கவனிக்கிறார். முதல் பாதியை பார்த்துவிட்டேன். இரண்டாம் பாதியை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

விஜய் ஆண்டனியின் இந்த திறமை பிரமிக்க வைக்கிறது. நடிகர், இசையமைப்பாளர் என்று தன்னுடைய திறமைகளை நிரூபித்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் எடிட்டிங் திறமையையும் நிரூபிக்க இருக்கிறார். இதற்காக நாங்கள் சம்பளம் கூட தரவில்லை’ என்றார்.