கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் அவர் பிச்சைக்காரன் 2, கொலை திரைப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அத்துடன் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் விஜய் ஆண்டனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம் குறித்து நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பள்ளியில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் ஆண்டனி அவர்கள், “எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் இனிமேல் தங்கள் பள்ளிகளில் நல்ல, சத்தான காலை உணவைப் பெறுவார்கள். இதுபோன்ற திட்டங்களில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இளம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிப்பார்கள். அருமையான திட்டம். நன்றி மு.க.ஸ்டாலின் சார்” என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Our govt school students will now get a good, nutritious breakfast in their campus. I am very happy that Tamil Nadu is focussing on schemes like this. Our young students can happily come to schools and study without hunger. Great scheme👍😊thank you @mkstalin sir! pic.twitter.com/iw4QjaZjEC
— vijayantony (@vijayantony) August 25, 2023