Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்

Vijay Antony to romance to three heroines

‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள்.

அரசியல் திகில் படமாக உருவாகி வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்.

Ramya Nambeesan, Nanditaswetha and Mahima Nambiar
Ramya Nambeesan, Nanditaswetha and Mahima Nambiar