Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ரோமியோ” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்ட படக்குழு.வைரலாகும் பதிவு

vijay-antonys-romeo-release-of-first-single update

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோமியோ’ படத்தின் முதல் சிங்கிள் ‘செல்லக்கிளி’ பாடல் வெளியானது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘ரோமியோ’. இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், ரோமியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘செல்ல கிளி’ என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.