தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க விஜய் பற்றிய சிறு துரும்பு அளவிலான தகவல் வெளியானாலும் அதனை ட்ரெண்டிங்கில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
அதாவது பல வருடங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற போது தளபதி விஜய் விளையாட்டு மைதானத்திலேயே வெறித்தனமாக நடனமாடி கொண்டாடியுள்ளார்.
இந்த அரிய வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில் அது விஜய் தானா என சந்தேகப்படும் அளவிற்கு சாதாரண ரசிகனை போல தன்னுடைய இமேஜை மறந்து நடனம் ஆடி உள்ளார் தளபதி விஜய்.
இதோ அந்த வீடியோ