Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி!

Vijay Devarakonda heroine paired with Srikanth!

ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’.

இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-வுடன் ‘துவாரகா’, தமிழில் அதர்வா-வுடன் ‘ருக்குமணி வண்டி வருது’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த ‘பூஜா ஜாவேரி’ இந்த படத்தின் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

தற்போது பூஜா ஜாவேரி, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.

சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

ECHO தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு: கோபிநாத், இசை: ஜான் பீட்டர், எடிட்டிங்: சுதர்ஷன், கலை: மைக்கேல் ராஜ், நடனம்: ராதிகா, சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி, தயாரிப்பு நிர்வாகம் : BM சுந்தர்.