Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.. வைரலாகும் பதிவு

vijay-devarakonda-shared-our-new-movie details

தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது “LIGER”என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார். இதில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் அவர்கள் இணைந்து நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தர்மா புரொடக்ஷன் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணி சர்மா பின்னணி இசையமைக்க விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து விஜய் தேவரகொண்டா படக்குழு அறிவித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது இப்படத்தின் டீசர் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் எனவும் முதல் பாடல் ஜூலை 11ஆம் தேதியில் வெளியாகும் எனவும் படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.