தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இன்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலரை ரோகிணி திரையரங்கில் வெளியிட்ட போது விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்து மெயின் ஸ்கிரீனில் இருந்த இருக்கையில் அனைத்தையும் சேதப்படுத்தினர்.
இதனை அடுத்து முதலில் லியோ படம் இங்கு ரிலீஸ் இல்லை என ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. பிறகு நேற்று மாலை 6 மணிக்கு அக்ரிமெண்ட் சைனாகி விட்டது. ரோகிணியில் லியோ ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய ரோகிணி தியேட்டருக்கு கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. முதல் நாள் முதல் காட்சியில் இன்னும் என்னெல்லாம் அலப்பறை பண்ண போறாங்களோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.