ரசிகர்கள் மத்தியில் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தளபதி விஜய். அவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் அவர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை நேரில் சந்தித்தார். அங்கு விஜயை காண ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். ஆனால் மக்கள் இயக்கம் அடையாளம் அட்டை வைத்திருக்கும் ரசிகர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் ஸ்டைலில் பிளையிங் கிஸ்ஸை பறக்க விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#ThalapathyVijay – Age is Just a Number 🤍#Varisu #Thalapathy67 #Thalapathypic.twitter.com/blt56nNrAz
— VCD (@VCDtweets) November 20, 2022