Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Vijay has become a 'Fan Boy'

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் ‘Fan boy’ ஆக மாறிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் விஜய் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி ஈக்வலைஸர் 3’ (The Equalizer 3) படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார்.

அதில் டென்ஸல் வாஷிங்டன் வரும் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் ‘Fan boy’ ஆக மாறி எழுந்து நின்று தன் கைகளை விரித்து கொண்டாடுவதை இயக்குனர் வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.