Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி கொடியை நிலை நாட்டிய விஜய்

vijay hoisting the official flag

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நிலைநாட்டியுள்ளார் விஜய்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இவரது கடைசி திரைப்படமான தளபதி 69 முடித்த கையோடு அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். அதன் ஆரம்ப கட்டமாக அவரது கட்சி கொடியை இன்று அறிமுகம் செய்யப் போவதாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார்.

vijay hoisting the official flag

vijay hoisting the official flag

தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் மேலே சிவப்பு நடுவில் மஞ்சள் மற்றும் கீழே சிவப்பு நிறத்திலும்,நடுவில் இரண்டு போர் யானைகளுடன் வாகை மலருடன் இருக்கும் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் இன்று காலையில் அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அனைவரும் முன்னிலையிலும் வெற்றி கொடியை நிலைநாட்டிய விஜய் உறுதிமொழி எடுத்துள்ளார்.

அதில், நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.

பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகின்றேன். என்று உறுதிமொழி எடுத்துள்ளார்.