தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது.
இந்த பாடல் வெளியான 30 நிமிடத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நாங்க வேற மாதிரி பாடல் சாதனையை முறியடித்து பீஸ்ட் பாடல் சாதனை படைத்துள்ளது. குறைந்த நேரத்தில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற பாடலாக இந்த பாடல் சாதனை படைத்துள்ளது.
