Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பீஸ்ட் மோடு” பாடல் வீடியோ இணையத்தில் வைரல்

vijay in beast mode video song out now

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது 62 ஆவது திரைப்படமாக உருவாகும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்களை இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த “பீஸ்ட்” திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பில் இடம் பெற்றிருந்த ‘திரை தீப்பிடிக்கும்’ என்னும் ‘பீஸ்ட் மோடு’ பாடலின் வீடியோ நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியாகி உள்ளது. 3:11 நிமிடம் இடம்பெற்று இருக்கும் இந்த வீடியோவில் ஆக்சன் நிறைந்த காட்சிகள் மட்டுமே இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்திருக்கும் இந்த பாடலின் முழு வீடியோவை சன் மியூசிக் நிறுவனம் தனது youtube சேனல் பக்கத்தில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.