Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் படத்தில் விமான ஸ்டண்ட் காட்சியை கலாய்த்த விமானப்படை அதிகாரி.. தீயாக பரவும் ட்வீட்

Vijay in Beast Movie Stunt Trolls

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். படு மோசமாக கிண்டலுக்கு உள்ளான இந்த திரைப்படம் தற்போது நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட OTT தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் படம் ரிலீசாகி பல நாட்கள் ஆன பிறகு இந்த படத்தில் விமான ஸ்டன்ட் காட்சிகள் குறித்து தனது பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி விமானப்படை அதிகாரி சஜன் சிவராமன் என்பவர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை கிண்டலடித்து பதிவு செய்து வருகின்றனர். இதனால் பீஸ்ட் திரைப்படம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதோ அந்த பதிவு