Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 69 படத்தில் விஜய் நடிக்க வாங்க போகும் சம்பளம் இத்தனை கோடியா? தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்குவோம் இந்த படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

தளபதி விஜய் தன்னுடைய கடைசி படமாக உருவாக உள்ள தளபதி 69 படத்திற்காக 250 கோடி ரூபாய்க்கு சம்பளம் வாங்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்கப் போவதாகவும் DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இவை எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி விஜயின் இயக்க கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், அட்லி ஆகியோரும் போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay in thalapathy 69 movie salary update
Vijay in thalapathy 69 movie salary update