Tamilstar
News Tamil News

பிக் பாஸ் வனிதா வீட்டுக்கு மனைவியுடன் சென்று சர்ப்ரைஸ் அளித்த தளபதி விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இறுதியில் படக்குழு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இருப்பினும் விஜய் பிறந்த நாளில் அவரைப் பற்றிய பழைய நினைவுகள், பழைய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி ரசிகர்களை ஓரளவிற்கு திருப்திப்படுத்தின.

அந்த வகையில் வனிதா விஜயகுமார் தன்னுடைய மகன் விஜய் ஸ்ரீ ஹரியின் முதல் பிறந்த நாளில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது வனிதாவின் மகனை தன் மடிமீது வைத்துக் கொஞ்சுகிறார். அந்தப் புகைப்படங்களை வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தளபதி விஜய் ஹீரோவாக அறிமுகமான சந்திரலேகா திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.