தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்க தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உட்பட பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி சென்னையில் கோலாகலமா நடைபெற்றது. அதன் பிறகு தமன் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் வாரிசு படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#VARISU Clean " U "
RunTime : 2 Hours 50 Minutes#ThalapathyVijay | #Thaman | #Vamshi
Pongal Release✌🏾— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 3, 2023