ரசிகர்களால் தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காஷ்மீரில் தீவிரமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் ஆயுத பூஜைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் ஒரு சில அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் தளபதி விஜயின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது, வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து சக்க போடு போட்டு இருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்து படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தபடி அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
hit hard like vijay does or don’t 👊🏻#VarisuOnPrime, Feb 22 in Tamil, Telugu, Kannada and Malayalam pic.twitter.com/kMO706qMqW
— prime video IN (@PrimeVideoIN) February 21, 2023