தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய விஜய் தனது 69ஆவது படத்துடன் நடிப்புக்கு டாட்டா முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
இதனால் விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அதாவது விஜய், எச் வினோத் கூட்டணி உறுதியாகி விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன. அதாவது எச் வினோத் சொன்ன கதை தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்துப் பார்க்க உடனே நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.