Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர்தான், வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கில்லி. கபடி வீரனாக விஜய் நடித்த திரிஷா நாயகியாக நடித்து வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

விஜய் திரைப்படத்தில் முதல் முறையாக 50 கோடி வசூலை செய்த திரைப்படம் ஆக கில்லி இடம் பிடித்தது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது விஜய் இல்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம் முதன் முதலாக இந்த படத்தில் நடிக்க இருந்தது விக்ரம் தான் என தெரிய வந்துள்ளது.

கில்லி படத்தை இயக்கிய தரணி அதற்கு முன்னதாக விக்ரமை வைத்து தில், தூள் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தார். இந்த நாள் இந்த படத்திலும் விக்ரமை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். மேலும் நாயகியாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அந்த சமயத்தில் இருவருமே பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த படத்தின் கதையை விஜய்யிடம் சொல்ல அவரும் ஓகே சொன்னதாக தெரியவந்துள்ளது. இந்தத் தகவலால் விக்ரம் இந்த படத்தை நிராகரிப்பது நல்லது தான், தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படமாக கில்லி அமைய இதுவும் ஒரு காரணம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Vijay movie latest update viral
Vijay movie latest update viral