தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், அதுமட்டுமின்றி இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
மேலும் இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, கடைசியாக வெளியான பிகில் திரைப்படமும் பெரிய வசூல் சாதனை புரிந்தது.
அதனை தொடர்ந்து இவர் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படமும் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது, ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் வெளியிடு தள்ளி போனது.
ஆனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.
அந்த வகையில் தற்போது உலகளவில் பிரபலமான பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் ட்விட்டர் பக்கத்தில், Leeds United அணியை குறித்து.
அவர்கள் அணி வீரர்களை வைத்து மாஸ்டர் பட போஸ்டர் பாணியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர், இதனை கண்ட விஜய்யின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
𝗩𝗮𝗮𝘁𝗵𝗶 𝗰𝗼𝗺𝗶𝗻𝗴 @LUFC 🔥 pic.twitter.com/ahRaxG6bsq
— Premier League India (@PLforIndia) September 27, 2020