Tamilstar
News Tamil News

விஜய்யை இயக்க ஆசைப்படும் சென்சேஷன் ஹிட் கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா?

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வெளிவந்த படம் கோமாளி.

இப்படத்தை அறிமுக இயக்குனரான இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.

இப்படத்தை ஐஸாரி கணேஷின் வெலஸ் இன்டர் நஷனல் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இப்படம் தமிழ் திரையுலக பாக்ஸ் ஆபிஸில் ஜெயம் ரவிக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

இந்நிலையில் பிரதீப் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கி விட்டதாக சமூக வலைதள பக்கத்தில் கூறினார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரது பிறந்தநாள் அன்று தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து, எப்போது விஜய் அண்ணனுடன் பண்ணவீர்கள் என கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதீப் ‘ கூடிய விரைவில் நடக்கும், நல்லதே நடக்கும் ‘ என தெரிவித்துள்ளார்.