இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
இந்த வெற்றியை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் விஜய் ரசிகர்கள் ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், “வாழ்த்துகளுக்கு நன்றி. விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். லவ் யூ விஜய்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த டுவீட்டை ரீடுவீட் செய்துள்ள நடிகர் விஜய், “ஷாருக்கான், அட்லீ மற்றும் ஜவான் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Congratulations on the blockbuster @iamsrk, @Atlee_dir and the entire #Jawan team!
Love you too @iamsrk sir https://t.co/yq5T2BOhz8
— Vijay (@actorvijay) September 27, 2023