தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் காக்க காக்க.
சூர்யாவுடன் ஜோதிகா இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது விஜய் தான். சில காரணங்களால் விஜய் இந்த கதையை நிராகரித்தார்.
தற்போது இதற்கான காரணத்தை போட்டு உடைத்துள்ளார் கௌதம் மேனன். அதாவது விஜய்யிடம் கதையை சொல்லும் போது கிளைமாக்ஸை சொல்லவில்லை. எனக்கு படத்தை முடிக்கும் போது கிளைமாக்ஸை எழுதி தான் பழக்கம்.
இந்த காரணத்தால் தான் விஜய் இந்த கதையை நிராகரித்ததாக கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.