Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு – ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்

Vijay returned to Chennai from Georgia

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்கள்.

அங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால், அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி, 2 வாரத்தில் ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. இதையடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்று சென்னை திரும்பினார்கள்.

தளபதி 65 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.