Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி. கடுப்பாகி விஜய் சேதுபதி கொடுத்த பதில்

vijay-sethupathi latest speech-goes-viral

“விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை இயக்கி இருந்தார். ‘அந்தாதூன்’ படம் தற்போது தமிழில் ‘ரீமேக்’ செய்யப்பட்டுள்ளது. ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இதையடுத்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு மும்முரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த புரோமோஷன் போது பத்திரிகையாளர்கள் இந்தி குறித்து கேள்வி கேட்டனர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, \”இந்த கேள்வியை இதற்கு முன்பு அமீர்கான் வரும்போது கேட்டீர்கள். இந்தி படிக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம். இன்றும் இந்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கேள்வியை தவறாக கேட்கிறீர்கள். இந்த கேள்வி இங்கு தேவையில்லாதது\” என்று கூறினார்.”,

vijay-sethupathi latest speech-goes-viral
vijay-sethupathi latest speech-goes-viral