தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் அனபெல் சுப்பிரமணியம். இதில் டாப்சி ஹீரோயினாக நடித்துள்ளார். இருவருமே இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராதிகா, தேவதர்ஷினி, யோகிபாபு, சுப்பு பஞ்சு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். திகில் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஜெய்பூரில் நடத்தி முடித்துள்ளனர். படத்தில் சரித்திர காலத்தையும், இப்போதைய காலத்தையும் காட்சிப்படுத்தி இருப்பதாகவும், சரித்திர கால கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி மன்னராகவும், டாப்சி ராணியாகவும் நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
முழு படத்தையும் பார்த்த விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு கதை மிகவும் பிடித்துள்ளதாம். இதனால் படத்தின் பெயரை இன்னும் ரசிகர்களை கவரும் வகையில் மாற்ற யோசிக்கிறார்கள். அதோடு இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.