இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ். பி பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் தான் அதிலிருந்து மீண்டார்.
இருப்பினும் நிமோனியா காரணமாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்தார்.
இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் நேரிலும் சமூக வலைதளப் பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி ஜெய்ப்பூரில் டாப்சி உடன் இணைந்து நடிக்கும் படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதால் அங்கு படப்பிடிப்பு தளத்தில் எஸ் பி பி யின் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
விஜய் சேதுபதியுடன் நடிகை டாப்ஸி, நடிகை ராதிகா ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.