தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று லாபம். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து லாபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது ஓடிடி தளத்தில்தான் வெளியாகிறது என்று செய்திகள் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி லாபம் திரைப்படம் முதலில் தியேட்டர்களில் தான் வெளியாகும் அதன் பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.