ஆற்றல் பட சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விதார்த். இவரது நடிப்பில் கே எல் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆற்றல். இந்தப் படத்தினை செவ்வந்தி பிலிம்ஸ் மைக்கேல் தயாரித்துள்ளார்.
எனர்ஜிடிக்கான டைட்டிலுடன் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஹேய் நீ என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு விஜய் சேதுபதியால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது இந்த பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.