சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட்டை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலை ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி அறிவித்திருக்கிறார்கள்.
#Maamanithan first single releasing on April 7th.
Maestro #Ilaiyaraja & Young Maestro @thisisysr musical 🎶 @seenuramasamy @SGayathrie @mynnasukumar @YSRfilms @U1Records @donechannel1 @CtcMediaboy pic.twitter.com/u4cz6Q9vyd
— VijaySethupathi (@VijaySethuOffl) April 5, 2021