விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.
ஏற்கனவே தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் ஏழாவது சீசனோடு சற்று ஓய்வு அறிவித்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று விஜய் சேதுபதியின் பேச்சில் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்தப் போட்டியின் போட்டியாளர்கள் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.