தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு, தற்போது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அவர் நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்த ஆந்தாலஜி படத்தை கவுதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள பகுதியை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார்.
இந்நிலையில், அதே தினத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமும் ரிலீசாக உள்ளது. அந்தப் படத்தின் பெயர் ‘உப்பென்னா’. தெலுங்கு படமான இதில் விஜய் சேதுபதி கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை பிச்சிபாபு சனா இயக்கி உள்ளார்.
இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜும், நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.