தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அந்த நிலையில் அதன் பிறகு இவர் ஹீரோவாக நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.
சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து முடித்த இவர் ஹீரோவாக நடிப்பார் என நினைக்கையில் தான் ஹீரோவாக போவதில்லை இயக்குனராகப் போவதாக சஞ்சய் முடிவெடுத்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது பாய்ஸ் கார்டனில் அமைக்கப்பட்ட புதிய ஸ்டூடியோவில் சஞ்சய்யின் பட பூஜை நடைபெற்று உள்ளது.
தளபதி விஜய் தற்போது 68 வது படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் இந்த பூஜையில் பங்கேற்க முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.