Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் ஸ்ரீ இயக்கும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் புதிய படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்

vijay-sri-in-hara-movie details

தமிழ் சினிமாவில் தாதா 87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பவுடர் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் பொல்லாத உலகின் பப்ஜி என்ற ஒரு படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக் மோகன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடிக்கும் படமான ஹரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் குஷ்பூ, யோகி பாபு என்ன பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மிக பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப்புடன் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் இந்த பிரம்மாண்ட படம் பற்றி அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 vijay-sri-in-hara-movie details

vijay-sri-in-hara-movie details