சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஆனால், இன்று வித்தியாசமாக விஜய், சூர்யா ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் டுவிட்டர் நிறுவனம் தான். இந்த ஆண்டு இந்திய அளவில் டுவிட்டர் பதிவுகளில் எவையெவை சாதனை புரிந்தன என்ற பட்டியலை டுவிட்டர் நிறுவனம் இன்று வெளியிட்டது.
அதன்படி விஜய் டுவிட்டரில் பதிவிட்ட செல்பி புகைப்படம், இந்திய அளவில் அதிகம் ரீ-டுவிட் செய்யப்பட்ட பதிவு என்ற சாதனையை படைத்திருந்தது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் ‘#VIJAYRuledTwitter2020’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.
அதேவேளையில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் #SooraraiPottru ஹேஷ்டேக், இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்ததாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து சூர்யா ரசிகர்கள் ‘#SURIYARuledTwitter2020’ என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். டுவிட்டர் டிரெண்டிங்கில் யார் முதலிடம் பிடிப்பது என்று இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.