Tamilstar
News Tamil News

டிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்த்திராக விளங்குபவர். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமும் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கும் டிக் டாக்கில் தளபதி விஜய் சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டிக் டாக்கில் அதிக அளவு ஹாஷ்டாக் பெற்ற இந்திய நடிகர்களில் தளபதி விஜய்யும் இடம்பிடித்துள்ளார்.

1. சல்மான் கான் – 13.7 பில்லியன்

2. விஜய் – 5 பில்லியன்

3. ஷாருக் கான் – 5 பில்லியன்

4. அல்லு அர்ஜுன் – 4.6 பில்லியன்