நாளைய தீர்ப்பு என்ற சிறு பட்ஜெட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தோன்றிய நட்சத்திரம் நடிகர் விஜய்.
இவர் தனது தந்தையின் இயக்கத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தாலும், தனது கடின உழைப்பினால் சில பாராட்டுக்கள், பல விமர்சனங்களை மக்கள் மத்தியில் இருந்து பெற்றார்.
அப்போது தான் பூவே உனக்காக எனும் பிளாக் பஸ்டர் வெற்றியை தனது ரசிகர்களுக்காக விக்ரமனின் வெற்றி இயக்கத்தின் கூட்டணியுடன் தேடி தந்தார் விஜய்.
ஆனால், இதன்பின் சில வெற்றி மற்றும் பல தோல்வியையும் சந்தித்து வந்தார் இளையதளபதி விஜய். அப்போது தான் எஸ்.ஜெ. சூர்யாவுடன் இணைந்து குஷி எனும் காதல் வெற்றி படத்தை கொடுத்தார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய்யை வசூல் மன்னனாக மக்களிடையே மாற்றியது இந்த 5 படங்கள் மட்டும் தான்.
1. கில்லி
2. போக்கிரி
3. துப்பாக்கி
4. மெர்சல்
5. பிகில்
ஆம் இப்படங்கள் அனைத்தும் தான் இளையதளபதி விஜய்யை தளபதி விஜய் என்று வசூல் மன்னனாக மாற்றி படங்கள்.