தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் ஆகி பெரும் வரவேற்பை பெற்றவர் ஆல்யா மானசா.
இந்த சீரியலில் தன்னோடு இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பமானத்தால் பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.
ஆனால் தற்போது சீரியலில் இருந்து விலக பிரசவம் மட்டும் காரணம் இல்லை என தெரியவந்துள்ளது. விரைவில் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ள ஆல்யா விஜய் டிவி சீரியலில் நடிக்கப் போவதில்லை. மாறாக சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.
ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஏற்கனவே சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வரும் நிலையில் இவர் சன் டிவியில் என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றே சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் ஆல்யாவை சன் டிவியில் பார்க்கலாம்.
