தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களுக்கு போன் கால் செய்து கலாய்த்து எடுப்பதில் கைதேர்ந்தவர் தீனா.
சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை என பலரையும் கலாய்த்து எடுத்துள்ள இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் தீனா உலக நாயகன் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படி சிரிக்க பழகிக் கொண்டால் எந்த காயமும் அவ்வளவு பெரிதல்ல என்று கமல்ஹாசன் கூறிய டயலாக்கை கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.
மேலும் நான் பெற்ற வெற்றிகளில் உங்களது சந்திப்பும் ஒன்று என தெரிவித்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்
View this post on Instagram